நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில், நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 3:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்பரப்பு நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம், இந்தியாவின் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை விரைவுபடுத்துவதற்கும், 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்கும் தேசிய இலக்கை அடைவதற்கும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும்,  யூரியா, அமோனியா, மெத்தனால் போன்ற முக்கியப் பொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் உதவும்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

சுமார் 75 மில்லியன் டன் நிலக்கரி / பழுப்பு நிலக்கரியை வாயுவாக்கும் இலக்குடன், புதிய மேற்பரப்பு நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கு ரூ.37,500 கோடி மொத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஆலை, இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான செலவில் அதிகபட்சமாக 20% வரை நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* திட்டச் செலவு, நிலக்கரி உள்ளீடு, செயற்கை எரிவாயு வெளியீடு ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்ட ஒரு மதிப்பீட்டுக் கட்டமைப்புடன், வெளிப்படையான, போட்டித்தன்மை வாய்ந்த ஏல செயல்முறையின் மூலம் தேர்வு நடைபெறும்.

* இத்திட்டத்தின் மூலம் நிலக்கரி வளம் நிறைந்த பகுதிகளில் உள்ள 25 திட்டங்களில் சுமார் 50,000 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 75 மில்லியன் டன் நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,300 கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260622&reg=3&lang=1 

----

SS/PLM/EA

 


(வெளியீட்டு அடையாள எண்: 2260769) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , Bengali-TR , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada