நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 முதல் 2033 வரையிலான தேசிய உத்திசார் வாய்ப்புகள் திட்டத்துடன் புதிய எட்டு ஆண்டு கால உத்தி தொடக்கம்

प्रविष्टि तिथि: 12 MAY 2026 8:30PM by PIB Chennai

இந்திய அரசு, சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியத்துடன் (ஐஎஃப்ஏடி) இணைந்து, கிராமப்புற வருமானத்தை உயர்த்துதல், மீள்திறனை வலுப்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 2026-2033 காலகட்டத்திற்கான புதிய எட்டு ஆண்டு கால தேசிய உத்திசார் வாய்ப்புகள் திட்டத்தை (COSOP) இன்று தொடங்கி வைத்துள்ளது.

 

புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் மூத்த அரசு அதிகாரிகள், ஐஎஃப்ஏடியின் தலைமை நிர்வாகிகள, வளர்ச்சி சார்ந்த கூட்டாளிகள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்துகொண்டனர். இந்தத் திட்டம், இந்திய அரசின் வளர்ச்சியடைந்த பாரதம்@2047 தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது.

 

கூட்டத்தில் உரையாற்றிய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி அனுராதா தாக்கூர், “இந்தியா-ஐஎஃப்ஏடி கூட்டாண்மை, அதன் நீண்ட கால நிலைத்தன்மையால் மட்டுமின்றி, அதன் உத்திசார் ஒருங்கிணைப்பாலும் தனித்துவமானது. இந்தியாவில் ஐஎஃப்ஏடி-இன் திட்டங்கள், வேளாண் மாற்றத்திற்கு ஆதரவளித்தல், வாழ்வாதார பல்வகைப்படுத்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற தேசிய முன்னுரிமைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று கூறினார்

“காலப்போக்கில், அடிப்படை வறுமை ஒழிப்பிலிருந்து, காலநிலை மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்கக்கூடிய, நிலையான மற்றும் சந்தை சார்ந்த கிராமப்புற வாழ்வாதாரங்களைக் கட்டமைப்பதை நோக்கி கவனம் மாறியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

 

புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த உத்தி, நிதி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் சந்தைகளை இணைக்கும் முக்கிய தளங்களாகச் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் போன்ற அடித்தள நிறுவனங்களை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260427&reg=3&lang=1

(Release ID: 2260427)

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2260470) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu