புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லரை பணவீக்க விகிதம் 3.48 சதவீதமாக உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 4:00PM by PIB Chennai
நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட சில்லரை பணவீக்க விகிதம் 3.48 சதவீதமாக உள்ளது. 2026 ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீடுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்பான கணக்கீடுகள் 2024-ம் ஆண்டை அடிப்பைடயாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் பணவீக்க விகிதம் 4.2 சதவீதமாக உள்ளது. வீட்டு வசதி பணவீக்க விகிதம் 2.15 சதவீதமாகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்கள் தொடர்புடைய பணவீக்க விகிதம் முறையை 2.65 சதவீதம் மற்றும் 1.96 சதவீதமாகும்.
இணையவழி சந்தை உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 1407 நகர்ப்புற சந்தைகள் மற்றும் 1405 கிராமப்புற சந்தைகளிலிருந்து விலைகள் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் சந்தை வாரியாக பதிவு செய்யப்பட்ட விலைகளில் கிராமப்புற சந்தைகளுக்கு 99.44 சதவீதமாகவும், நகர்ப்புற சந்தைகளுக்கு 99,82 சதவீதமாகவும் இருந்தன.
2026-ம் ஆண்டு மே மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்க விகிதம் ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும். அதேசமயம் ஏப்ரல் மாதத்திற்கான மாநிலம் மற்றும் பொருட்கள் வாரியான நுகர்வோர விலைக் குறியீடு குறித்த விவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்திலிருந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260251®=3&lang=1
****
TV/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260387)
வருகையாளர் எண்ணிக்கை : 11