அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத தொழில்நுட்ப மாற்றத்தைக் கண்டுள்ளது: தேசிய தொழில்நுட்ப தின விழாவில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் உரை
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2026 4:45PM by PIB Chennai
தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு புது டெல்லியில் நடைபெற்ற 'விஞ்ஞான-டெக் 2026' நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், சுதந்திர இந்தியாவின் பெரும் தொழில்நுட்ப மாற்றம் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசு உறுதியான கொள்கை சீர்திருத்தங்கள் காரணமாக, 2014-ல் வெறும் 400-ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் மையமாக உருவெடுத்துள்ளது. மேலும், உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டில் இந்தியா 80-வது இடத்திலிருந்து 38-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அறிவியல் நிறுவனங்களிடையே வலுவான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், பிரதமரின் ஏழு அம்ச வேண்டுகோளை விஞ்ஞானிகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேசிய குவாண்டம் மிஷன் மற்றும் இந்தியா ஏஐ மிஷன் போன்ற திட்டங்கள் இந்தியாவை முன்னணியில் நிலைநிறுத்தியுள்ளதாகவும், 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய அறிவியல் தொழில்நுட்பமே அடிப்படையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259847®=3&lang=1
**
EA/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2260302)
வருகையாளர் எண்ணிக்கை : 4