தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட அந்தேரி ரயில் நிலைய தபால் நிலையத்தைத் திறந்து வைத்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 12:09PM by PIB Chennai

மத்திய தொலைத் தொடர்பு துறை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர், தபால் துறையின் முதன்மைத் திட்டமான 'ஜன் சேவா கனெக்ட்' திட்டத்தின் கீழ், எதிர்காலத்திற்குத் தயாரான தபால் நிலையமாக, புதுப்பிக்கப்பட்ட அந்தேரி ரயில் நிலைய (ஆர்.எஸ்) தபால் நிலையத்தை மும்பையில்  மே 8 அன்று திறந்து வைத்தனர்.

 

1932-33-ல் நிறுவப்பட்ட அந்தேரி ரயில் நிலைய தபால் நிலையம், பாரம்பரிய தபால் நிலையங்களை நவீன, வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட மற்றும் தொழில்நுட்ப வசதி கொண்ட சேவை மையங்களாக மாற்றும் இந்திய தபால் துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலைப் பள்ளியுடன் இணைந்து இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

1.65 லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களின் கட்டமைப்புடன், இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் நிதி உள்ளடக்கத்திலும் பொதுச் சேவை வழங்கலிலும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தத் துறை, 2025-26-ம் ஆண்டில் மொத்த தபால் வருவாயில் 16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது அதன் தற்போதைய மாற்ற முன்முயற்சிகளின் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

 

ஜன் சேவா கனெக்ட் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட அந்தேரி ஆர்.எஸ். தபால் நிலையத்தின் திறப்பு விழாவில், சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

 

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் நவீன, எதிர்கால நோக்குடைய மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட தபால் உள்கட்டமைப்பை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

 

மக்களை இணைப்பதிலும், கடைக்கோடி வரை சேவைகளை வழங்குவதிலும் இந்திய தபால் துறையின் பங்கை முதலமைச்சர் திரு. தேவேந்திர ஃபட்னாவிஸ் எடுத்துரைத்தார்.

 

ஜன் சேவா கனெக்ட் என்பது இந்திய தபால் துறையின் முதன்மை உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் திட்டமாகும். இது தபால் நிலையங்களை எளிதில் அணுகக்கூடிய, திறமையான மற்றும் டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட சமூக சேவை மையங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் கீழ், மகாராஷ்டிரா முழுவதும் உள்ள சுமார் 2,000 தபால் நிலையங்களைத் தரம் உயர்த்த இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

 

(Release ID: 2259291)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259363) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी