சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் நடுவர் மன்ற வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெற்றி பெற்று பெரிய நிதி இழப்பைத் தடுத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2026 5:53PM by PIB Chennai

குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 48-ன் ஒரு பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்றது. இது தொடர்பாக நடுவர் மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒப்பந்ததாரர்  நிதி இழப்பீடாக 174.49 கோடி ரூபாய் கோரினார். ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலுவான தரவுகளுடன் வாதாடியதால் நடுவர் மன்றம் 54 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க உத்தரவிட்டு, பெரிய நிதி இழப்பை தடுத்துள்ளது.

இந்த சாலைக்கட்டுமானப் பணிகளை செயல் திறன் குறைபாடு காரணமாக ஒப்பந்ததாரர் நடுவர் மன்றத்தை நாடி 177.49 கோடி ரூபாய் கோரினார். ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  சிறப்பான கண்காணிப்பு, ட்ரோன் பதிவுகள், டிஜிட்டல் பதிவேடுகள், தொழில்நுட்ப ரீதியிலான  ஆவணங்கள் ஆகியவற்றை பராமரித்து  வலுவான ஆதாரங்களுடன் வாதாடியது. இதன் விளைவாக ஒப்பந்ததாரர் மிக அதிகமாக இழப்பீடு கேட்பது தெரியவந்து, அவரது தரப்பின் வாதம் முறியடிக்கப்பட்டது. இறுதியில் ஒப்பந்ததாரருக்கு 54 லட்ச ரூபாய் மட்டுமே வழங்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259120&reg=3&lang=1

 

****

TV/PLM/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259185) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी