நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நிலையான வளர்ச்சி இலக்குகளில் பாலின சமத்துவம் குறித்து நிதி ஆயோக் சார்பில் பயிலரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2026 5:19PM by PIB Chennai

நிலையான வளர்ச்சி இலக்குகளில் பாலின சமத்துவம் குறித்து நிதி ஆயோக், அகமதாபாத் ஐஐஎம், குஜராத் அரசு இணைந்து அகமதாபாத் ஐஐஎம்-ல் ஒரு பயிலரங்கை நடத்தின. நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஐந்தாவது அம்சமாக பாலின சமத்துவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக விவாதித்த  ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகள், ஐநா அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் தொடக்க அமர்வில் பங்கேற்று பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மகளிர் மேம்பாடு தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்தவும் அவற்றைக் கண்காணிக்கவும், தொழில்நுட்ப அடிப்படையிலான சிறந்த நிர்வாகம் தேவை என்றார். இதன் மூலம் திட்டங்களைக் கண்காணித்து தேவைக்கேற்ப வலுவான கொள்கைகளை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கொள்கை வகுத்தல், மகளிருக்கு பொருளாதாரம் அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவு ஆதரவு போன்றவை குறித்து இந்தப் பயிலரங்கில் பல்வேறு அமர்வுகளில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259092&reg=3&lang=1

 

****

TV/PLM/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2259182) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati