அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புக்கான கொள்கை, செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2026 12:52PM by PIB Chennai

அறிவியல், தொலைத்தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம்,  வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 மே 6 அன்று கையெழுத்தாகியது. அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புக்கான கொள்கை, செயல்பாடுகளை, ஆராய்ச்சிப் பணிகள் கொள்கை பகுப்பாய்வுகள், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் திறன்களின் மூலம் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

அறிவியல் கொள்கை, தகவல் தொடர்பு, பேச்சுவார்த்தை, பாரம்பரிய ஞானம் உள்ளிட்ட அம்சங்களில் பல்வேறு திட்டங்கள், பதிப்புகள், கொள்கைகளை வரையறை செய்வது, பயிலரங்குகள் மற்றும் தகவல் தொடர்பு போன்றவற்றை உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் குமார் சர்மா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார்.

அறிவியல் ரீதியிலான செயல்பாடுகள், பரஸ்பரம் இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையை கட்டமைக்கும் முக்கிய கருவியாக திகழ்வதாக குறிப்பிட்டார். பருவநிலை மாறுபாடு, சுகாதாரம், தொழில்நுட்ப சமத்துவமின்மை போன்றவற்றில் உள்ள உலக அளவிலான சவால்களுக்கு தீர்வு காணவும் உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளின் அறிவியல் ரீதியிலான நிர்வாக செயல்பாடுகளின் பங்களிப்பை உறுதி செய்வதற்கும் இது உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.

அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சிப் பணிகளுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கீதா வாணி ராயசம், வளரும் நாடுகளுக்கு உதவிடும் முயற்சிகளில் பரஸ்பரம் இருதரப்புக்கும்  பயனளிக்கும் வகையில், குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கும் கூட்டாக அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக கூறினார்.  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சூழல் அமைப்பு, குறைந்த விலையில் எச்ஐவி தொற்றுக்கான மருந்துகள் கண்டுபிடிப்பு, பாரம்பரிய அறிவுசார் மதிப்பீடு, கிராமப்புற புதுமைக் கண்டுபிடிப்புகள், 15 ஆய்வுக் கட்டுரைகளை பயன்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258639&reg=3&lang=1

***

SS/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2258820) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi