புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2022-23-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மொத்த மாநில மதிப்புக்கூட்டல் மதிப்பீடுகளை தொகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2026 4:11PM by PIB Chennai
2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு தேசிய அளவிலான கணக்குகளை புதுப்பிப்பதற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நவீன தரவுகளின் ஆதாரங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு நிறைவுரைகளை இணைப்பதன் மூலம் பொருளாதாரத்தின் தற்போதைய கட்டமைப்பை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை தொகுப்பதற்கு இந்த ஆண்டை அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மண்டல அளவிலான பொருளாதார செயல்பாடுகளை மதிப்பிடுவதில் சீரான நடைமுறையையும் துல்லியமான தரவுகளையும் அதன் ஒப்பீடு தன்மையையும் உறுதி செய்கிறது.
இந்த மாற்றத்திற்கு வழிகாட்டும் வகையில் தேசிய கணக்குகளுக்கான புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் குழு மண்டல அளவிலான கணக்குகள் குறித்த துணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தத் துணைக் குழு ஐஐஎம் அகமதாபாதில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் திரு ரவீந்திர தொலாக்கியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி, நித்தி ஆயோக், கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மாநில உள்நாட்டு உற்பத்தி மற்றும் மாவட்ட உள்நாட்டு உற்பத்தி போன்ற தரவுகளை தொகுப்பதற்கான வரையறைகள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் புதிதாக உருவாகி வரும் தரவுகளைச் சேகரிப்பதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதே இக்குழுவின் முக்கியப் பணியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258718®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2258815)
வருகையாளர் எண்ணிக்கை : 8