தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 84.69% வாக்குகள் பதிவு

प्रविष्टि तिथि: 23 APR 2026 8:38PM by PIB Chennai

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க (முதற்கட்டம்) சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 2 மாநிலங்களின் (குஜராத், மகாராஷ்டிரா) 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் சாதனை அளவாக, தமிழ்நாட்டில் 84.69% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் (முதற்கட்டம்) 91.78% வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், கடந்த 2011 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 78.29% வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 84.72% வாக்குகளும் பதிவாகியிருந்தன.

தமிழ்நாட்டில் இன்று 83.57% ஆண் வாக்காளர்களும், 85.76 பெண் வாக்காளர்களும், 60.49% மூன்றாவது பாலினத்தவரும் வாக்களித்தனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில்  உள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 2.80 கோடி ஆண்களும், 2.93 கோடி பெண்களும், 7,728 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்காக, தமிழ்நாட்டில் 75,064 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 234 தொகுதிகளுக்கு 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 3,75,320 வாக்குச்சாவடி ஊழியர்களும், 4,21,328 வாக்குச்சாவடி முகவர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். 

தமிழ்நாட்டில் உள்ள 6,411 வாக்குச்சாவடிகள் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 6,345 வாக்குச்சாவடிகள் தொடர்பான தரவுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255010&reg=3&lang=1  

***

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2255048) आगंतुक पटल : 254
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati