தேர்தல் ஆணையம்
பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் 2026: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரொக்கம், போதைப்பொருட்கள் பறிமுதல்
இடுகை இடப்பட்ட நாள்:
22 APR 2026 4:44PM by PIB Chennai
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 2,283 தேர்தல் பறக்கும் படைகளும், மேற்கு வங்கத்தில் 2,728 தேர்தல் பறக்கும் படைகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ரூ.100.19 கோடி ரொக்கமும், ரூ.3.85 கோடி மதிப்பிலான மதுபானமும், ரூ.76.72 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் ரூ.259.14 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் ரூ.27.48 கோடி ரொக்கமும் ரூ.102.45 கோடி மதிப்பிலான மதுபானமும், ரூ.178.83 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு மாநிலங்களிலும் ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.1072.13 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப் பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் இலவசப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254524®=3&lang=1
***
TV/SMB/LDN/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2254645)
வருகையாளர் எண்ணிக்கை : 26