தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு, மேற்குவங்கம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் கருவிகள் அனுப்பும் பணி தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 APR 2026 4:23PM by PIB Chennai
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல், 6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிக்கையை கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை அனுப்பி வைப்பதற்கான பணிகள் இன்று (16.04.2026) வியாழக்கிழமை அன்று அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிரிதிநிதிகள் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு முன் வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் 5 சதவீத மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஆயிரம் வாக்குகளைக் கொண்ட மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த மாதிரி வாக்குப்பதிவில் பங்கேற்க வேட்பாளர்கள் உள்ளிட்ட அவர்களது பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கு முன்னதாக இரண்டு கட்ட ரேண்டம் தேர்வு முறையின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மேலாண்மை நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக மாவட்ட அளவிலான சேமிப்புக் கூடத்திலிருந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக சட்டப்பேரவைத் தொகுதிகள் நிலையிலான வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரேண்டம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச் சாவடிகளிலும் மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 44,378 வாக்குச்சாவடிகளிலும் இம்மாதம் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, முதல் கட்ட ரேண்டம் அடிப்படையிலான மின்னணு வாக்குப்பதிவு எந்திர மேலாண்மை முறையின் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரால் தேசிய மற்றும் மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மேலாண்மை முறையின் மூலம் தேர்தல் அதிகாரியால் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரேண்டம் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு இம்மாதம் 23-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தின் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கான இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் கட்டமாக ரேண்டம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பகிரப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைகளில் தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் வைக்கப்பட்டது.
முதலாவது மற்றும் இரண்டாவது கட்டமாக ரேண்டம் முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளில் விவரங்கள் அடங்கிய பட்டியல் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்பட்டுள்ளது.
----
(Release ID: 2252626)
SS/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2252713)
வருகையாளர் எண்ணிக்கை : 16