அணுசக்தி அமைச்சகம்
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி வேக ஈனுலை முதலாவது செயல்பாட்டை அடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
07 APR 2026 11:17AM by PIB Chennai

நாட்டின் அணுமின் சக்தித் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, 2026 ஏப்ரல் 6 அன்று இரவு 08:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது. இது நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறையாகும்.

மத்திய அணுசக்தி துறைச் செயலாளர் மற்றும் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அஜித் குமார் மொகந்தி, இந்திய அணுசக்தி ஆணையத்தின் இயக்குநர் திரு ஸ்ரீகுமார். பாவினி நிறுவனத்தின் பொறுப்புத் தலைவர் ஜி. பிள்ளை, மற்றும் நிர்வாக இயக்குநர் திரு அல்லு அனந்த் மற்றும் பாவினி மற்றும் ஹோமி சேத்னா முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநர் திரு கே.வி. சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த அணுப்பிளவு செயல்முறை நிகழ்த்தப்பட்டது. அணுமின் உற்பத்தி ஆலை கட்டமைப்புகளின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்து அனுமதி பெற்ற பின்னர் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பிறகு, பாவினி மற்றும் ஹோமி சேத்னா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுரேஷ் குமார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

முன்மாதிரி விரைவு கதிரியக்க அணு உலையின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வடிவமைப்பு, அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. மேலும், இது அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமான பாரதிய நபிகிய வித்யுத் நிகம் நிறுவனத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249537®=3&lang=1
***
AD/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2249583)
வருகையாளர் எண்ணிக்கை : 42