பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம்
प्रविष्टि तिथि:
14 FEB 2026 6:05PM by PIB Chennai
ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, பிப்ரவரி 16 முதல் 19 வரை ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணம் இந்தியா - ஆஸ்திரேலியா பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள், தொழில்முறை பரிமாற்றங்கள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட ராணுவ ஈடுபாடுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைகளின் மூத்த தலைமையுடன் அவர் பரந்த அளவிலான தொடர்புகளை நடத்துவார்.
சிட்னி, கான்பெரா ஆகிய நகரங்களுக்கு செல்லவுள்ள அவர், ஆஸ்திரேலிய ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுடன் கலந்துரையாடுவார். ஆஸ்திரேலிய ராணுவத் தளபதியும் ஜெனரல் உபேந்திர திவிவேதியும் 2015-ம் ஆண்டு அமெரிக்க ராணுவப் போர் கல்லூரி வகுப்பின் முன்னாள் மாணவர்கள் மற்றும் வலுவான தொழில்முறை பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைகள் தலைமையகத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நவீனமயமாக்கல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த அம்சங்கள் குறித்து விரிவான வட்டமேசை விவாதம் நடைபெறும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு கூட்டாக பங்களிப்பதற்கும் இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228155®=3&lang=1
-----
TV/PKV/EA
(रिलीज़ आईडी: 2243071)
आगंतुक पटल : 49