மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீநகரில் தேசிய குளிர் நீர் மீன்வள மாநாட்டில் தொழில்நுட்ப விவாதங்கள் நடைபெற்றன

प्रविष्टि तिथि: 15 MAR 2026 10:13AM by PIB Chennai

இந்தியாவின் குளிர் நீர் மீன்பிடித் துறையின் ஆற்றலை வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக நிலையான முறையில் பயன்படுத்துவது குறித்த முதல் தேசிய உரையாடலாக, ஸ்ரீநகரில் மீன்வளத் துறை குளிர் நீர் மீன்வளம் குறித்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது.

மாநாட்டின் ஒரு பகுதியாக குளிர் நீர் மீன்வளத்தில் அதிநவீன கண்டுபிடிப்புகளைக் காண்பிக்கும் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள், நிறுவனங்களைச் சேர்ந்த 17 கண்காட்சியாளர்கள் சிறந்த நடைமுறைகளைக் காட்சிப்படுத்தினர்.

இந்த மாநாட்டின் போது, ஆராய்ச்சி, புதுமை, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, உள்கட்டமைப்பு விரிவாக்கம், நிறுவன ஒருங்கிணைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய கருப்பொருள் பகுதிகள் குறித்து ஆலோசிக்க மத்திய அரசின் மீன்வளத் துறையால் தொழில்நுட்ப அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த அமர்வுகளுக்கு மத்திய மீன்வளத் துறையின் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமை வகித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240291&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2240351) आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi