குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதி - கிராமத் தொழில்கள் துறையின் வளர்ச்சிக்காக காதி - கிராமத் தொழில்கள் ஆணையம் கிராமோத்யோக் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது - ஊதிய உயர்வால் 4.32 லட்சத்திற்கும் மேற்பட்ட நூற்பாளர்கள், நெசவாளர்கள் பயனடைந்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2026 4:28PM by PIB Chennai
காதி-கிராமத் தொழில்கள் துறையின் வளர்ச்சிக்காக காதி கிராமோத்யோக் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தை காதி - கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆணையத்தின் தகவல்களின்படி, முந்தைய ஆண்டை விட டிசம்பர் 2025 வரை காதி - கிராமத் தொழில்களின் கீழ் அடையப்பட்ட விற்பனை - உற்பத்தி அதிகரித்துள்ளது.
காதி கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC), காதி கைவினைஞர்களின் ஊதியத்தை அவ்வப்போது திருத்தி வருகிறது.
நெசவு கூலி 01.04.2023 முதல் 10%, 02.10.2024 முதல் 7%, 01.04.2025 முதல் 20% அதிகரிக்கப்பட்டுள்ளது. காதி துறையுடன் தொடர்புடைய சுமார் 4.32 லட்சம் நூற்பாளர்கள், நெசவாளர்கள் ஊதிய உயர்வால் பயனடைகிறார்கள்.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் நிறுவனத்துடன் செப்டம்பர் 2025-ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சந்தை அணுகலை எளிதாக்கும் ஒரு சூழல் அமைப்பை உருவாக்கும்.
இந்தத் தகவலை மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, மக்களவையில் 2026 மார்ச் 12 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240162®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240275)
வருகையாளர் எண்ணிக்கை : 8