ரெயில்வே அமைச்சகம்
ரயில் இணைப்பை வலுப்படுத்த, தமிழ்நாட்டில் 1,700 கி.மீ.க்கும் அதிகமான நீளமுள்ள முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை இந்திய ரயில்வே நிறைவுசெய்துள்ளது: மாநிலங்களவையில் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2026 7:43PM by PIB Chennai
சமீப ஆண்டுகளில் ரயில்வே துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2009-14 ஆண்டுகளிடையே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக வருடத்திற்கு 879 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, 2025-26 ஆம் ஆண்டில் சுமார் 7.5 மடங்கு அதிகரித்து, 6,626 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. 01.04.2025 நிலவரப்படி, 22,808 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாட்டில் 1,700 கி.மீ நீளமுள்ள 15 திட்டங்களுக்கு (9 புதிய வழித் தடங்கள், 3 பாதை மாற்றங்கள் மற்றும் 3 இரட்டை ரயில் பாதைகள்) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுப் பயணிகளின் வசதிக்காக, 01.04.2021 முதல் 28.02.2026 வரையிலான 5 ஆண்டுகளில், 295 நிறுத்தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் 52 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 16 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 12 அம்ரித் பாரத் ரயில்கள் இதில் அடங்கும். அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடுமுழுவதும் 1,337 நிலையங்கள் புனரமைப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 77 நிலையங்களில் சென்னை பூங்கா, சிதம்பரம், காரைக்குடி சந்திப்பு, பொள்ளாச்சி சந்திப்பு, ஸ்ரீரங்கம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20 நிலையங்களின் மறுமேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பழனி நிலையம், விருதுநகர் சந்திப்பு நிலையம், கரூர் சந்திப்பு நிலையம், தஞ்சாவூர் சந்திப்பு நிலையம், விழுப்புரம் சந்திப்பு போன்ற மற்ற நிலையங்களிலும் மேம்பாட்டு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதமாகிறது. தமிழ்நாட்டில் திட்டங்களுக்குத் தேவையான 4,326 ஹெக்டேர் மொத்த நிலப்பரப்பில், 76% நிலம் (3,274 ஹெக்டேர்) இன்னும் கையாகப்படுதப்படாமல் உள்ளது. இந்தப் பணியை விரைவுபடுத்த தமிழக அரசின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மாநிலங்களவையில் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239871®=3&lang=1
(Release ID: 2239871)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239986)
வருகையாளர் எண்ணிக்கை : 10