பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு ஆயுஷ் ஆராய்ச்சியின் மறு ஆய்வுக்கான நெறிமுறைகள் சார்ந்த புதிய அளவுகோல்களை நிர்ணயித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 4:14PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு ஆயுஷ் ஆராய்ச்சியின் மறு ஆய்வுக்கான நெறிமுறைகள் சார்ந்த புதிய அளவுகோல்களை நிர்ணயித்துள்ளது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற நெறிமுறைகளுடன் செயல்படும் அமைப்புகள் மூலம், ஆயுஷ் துறையில் ஆராய்ச்சிகளுக்கான நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்படும். ஆசிய மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் நெறிமுறை சார்ந்த மறுஆய்வுக்கான முன்முயற்சிகளை மேற்கொள்வது குறித்து இம்மாதம் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆய்வுகள் தொடர்பான நெறிமுறை சார்ந்த மறுஆய்வு நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் தரநிலைகளை இரண்டு சர்வதேச மதிப்பீட்டுக் குழுவும் 3 இந்திய ஆய்வுக் குழுவும் விரிவாக மதிப்பாய்வு செய்தன.

சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சுகாதார ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்வதற்குமான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு இது உதவிடும். சர்வதேச தேசிய மற்றும் உள்ளூர் தரநிலைகளுக்கு ஏற்ப ஆய்வுப் பணிகளை மதிப்பீடு செய்வதற்கும் சுகாதாரம் சார்ந்த ஆய்வுகளில் மனிதர்களின் பங்கேற்புடன் பாதுகாப்பான முறையில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் புதிய அளவுகோல்கள் உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239613&reg=3&lang=1

 

****

TV/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239849) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी