மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
நாட்டில் தரவு மையங்களுக்கான மின் உற்பத்தித் திறன் கடந்த 2025-ம் ஆண்டில் 1,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2026 4:15PM by PIB Chennai
நாடு முழுவதிலும் உள்ள தரவு மையங்களுக்கான மின்சாரத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் இந்தத் தரவு மையங்களுக்கான் மின்சாரத் தேவை 375 மெகாவாட்டிலிருந்து கடந்த 2025-ம் ஆண்டு 1,500 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் இதர பெரிய அளவிலான தரவு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அதற்கான மின்சாரத் தேவையும் உயர்ந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் 2031-32-ம் ஆண்டுக்குள் அதற்குத் தேவையான மின் உற்பத்தித் திறன் 13.56 ஜிகாவாட்டாக இருக்கும் என்ற மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அணுஎரிசக்தி உற்பத்திக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், அண்மையில் நாடாளுமன்றத்தில், நீடித்த உற்பத்தி மற்றும் மேம்பட்ட அணு எரிசக்தி மாற்றத்திற்கான சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர தகுதி வாய்ந்த பயனாளர்களுக்கு மானிய விலையில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 65 ரூபாய் வீதம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது உலக அளவில் மின்சாரத்திற்கான சராசரி விலையில் மூன்றில் ஒரு பங்காகும். மும்பை, நவிமும்பை, ஐதராபாத், பெங்களூரு, நொய்டா மற்றும் ஜாம்நகரில் இது போன்ற பெரிய தரவு மையங்கள் அமைந்துள்ளன.
இந்த தரவு மையங்களுக்கான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239616®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239843)
வருகையாளர் எண்ணிக்கை : 12