மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை சுகாதாரம், நோய்க் கட்டுப்பாட்டு திட்டங்கள்

प्रविष्टि तिथि: 13 MAR 2026 11:44AM by PIB Chennai

கால்நடைகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், கால்நடைகளுக்கு வரும் நோய்களைத் தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கால்நடைத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய அவர், மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் கால்நடை தொற்று நோய் மற்றும் நோய்கள் குறித்த தரவுகளுக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னர் ஏற்படும் தாக்கங்கள் குறித்த ஆய்வுத் திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதன்படி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும், நோய்த்தொற்று பரவல் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239417&reg=3&lang=1

***

AD/SV/KPG/RK


(रिलीज़ आईडी: 2239742) आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी