தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மருத்துவமனையின் ஊழியர்களின் அலட்சியத்தால் புதிதாகப் பிறந்த குழந்தை இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 11:49AM by PIB Chennai

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சக்ரதார்பூர் துணைப்பிரிவு மருத்துவமனையில் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் தாய் மற்றும் அவரது குழந்தைக்கு முறையான மருத்துவ கவனிப்பு இல்லாததால் அவரது பிறந்த குழந்தை இறந்தது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.  இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. 2026-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி மருத்துவமனையால் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், குழந்தையின் உடலை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து  கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் தந்தைக்கு ஏற்பட்டது.

இந்த செய்தி உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் மீறப்படும் கடுமையான பிரச்சினையை எழுப்புகின்றன என்று ஆணையம் கவனித்துள்ளது. எனவே, ராஞ்சியில் உள்ள சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் துணை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

2026-ம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தி, இறந்த குழந்தையின் உடலை மருத்துவமனையில் இருந்து அகற்றும்படி மருத்துவமனை ஊழியர்கள் குடும்பத்தை கட்டாயப்படுத்தியதுடன், எந்த உதவியும் வழங்க மறுத்ததாகத் தெரிவிக்கிறது. .

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239422&reg=3&lang=1

***

AD/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239529) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी