பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னேற்றம் அடைய சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2026 12:04PM by PIB Chennai

எப்போதும் ஒளி வீசி வரும் சூரியனைப் போல, முன்னேற்றம் அடைவதற்கு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். 

"चरन् वै मधु विन्दति चरन् स्वादुमुम्बरम्

सूर्यस्य पश्य श्रेमाणं यो न तन्द्रयते चरंश्चरैवेति॥"

எப்போதும் ஒளி வீசி வரும் சூரியனுக்கு சிறப்பு கிடைப்பது போல், முன்னேற்றப் பாதையில் செல்பவர்கள், உலகின் சிறந்த வெகுமதிகளைப் பெறுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே முன்னேற்றம் அடைய எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த சமஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின் திட்டம், நம் அனைவரது வாழ்க்கையில் உற்சாகமும், ஆற்றலும் வழங்கும், சூரிய பகவானால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு தூய்மை எரிசக்தியை பெற தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“எப்போதும் ஒளி வீசி வரும் சூரியன் மகிமை பெறுவது போல், முன்னேற்றப் பாதையில் செல்பவர்கள், உலகின் சிறந்த வெகுமதிகளைப் பெறுகிறார்கள். முன்னேற்றம் அடைய எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த சமஸ்கிருத சுபாஷிதம் வலியுறுத்துகிறது.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227375&reg=3&lang=1  

***

TV/SV/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239515) வருகையாளர் எண்ணிக்கை : 32