சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சட்ட அமைச்சர் பங்கேற்கும் தொழில்நுட்பம் அடிப்படையில் நீதித்துறைச் சேவைகளை வலுப்படுத்துவது குறித்த மண்டல அளவிலான பயிலரங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 8:47AM by PIB Chennai

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் முழுமையான நீதி கிடைப்பதற்கான புதுமையான தீர்வுகளை வடிவமைக்கும் திஷா திட்டத்தின் கீழ், மண்டல அளவிலான பயிலரங்கை சென்னை கலைவாணர் அரங்கில் நாளை (14.03.2026) நடத்துகிறது.

இந்தப் பயிலரங்கில் மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால், தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.  இவர்கள் திஷா திட்டத்தின் மூலம் இணையவழி சட்டசேவைகளின் அமலாக்கம் குறித்து வழக்கறிஞர் குழு மற்றும்  சட்டத்துறையின் வல்லுநர்களுடன நேரடியாக கலந்துரையாடுகின்றனர்.

தொழில்நுட்பம் அடிப்படையில் நீதித்துறையின் சேவைகளை வலுப்படுத்தும் ஒரு முன்முயற்சியாக இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது. இதில் துறைசார்ந்த வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். நீதித்துறை மேற்கொண்டு வரும் தொழில்நுட்ப மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது.

இந்தப் பயிலரங்கில் தமிழ்நாடு முழுவதும் இணையவழி சட்டசேவைகளை மக்களிடையே கொண்டு செல்வது உள்ளிட்ட  பல்வேறு  செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த சட்டசேவைகள், விளிம்பு நிலை மக்கள் நீதித்துறை தொடர்பான சேவைகளை எளிதாக பெறுவதற்கும் இது வகை செய்கிறது. இந்தப் பயிலரங்கு வழக்கறிஞர்கள் குழு, கிராமப்புற அளவிலான தொழில்முனைவோர் மற்றும் பயனாளிகள் என அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கிறது.

இந்தப் பயிலரங்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், சென்னை வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், சட்டச் சேவை மையங்களைச் சேர்ந்த கிராமப்புற தொழில்முனைவோர், பேராசிரியர்கள், சட்டத்துறை மாணவர்கள் உள்ளிட்ட 800-க்கும் அதிகமானோர் நேரடியாகவும் காணொலிக் காட்சி வழியாக மேலும் பலரும் பங்கேற்கின்றனர்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239360&reg=3&lang=1

***

AD/SV/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2239483) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu