தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறையில் சமர்த் திட்டத்தின் கீழ் 18 புத்தொழில் நிறுவனங்களுக்கான மானியங்களை சிடாட் வழங்குகிறது
प्रविष्टि तिथि:
13 MAR 2026 9:30AM by PIB Chennai
மததிய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் சமர்த் திட்டத்தின் கீழ், புதுதில்லியில் நேற்று (12.03.2026) செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தியது.
தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு பயன்பாடு, சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, இணையதள பயன்பாடு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 புத்தொழில் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மானிய உதவியும் வழங்கப்படுகிறது. மேலும், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து அதிநவீன வசதிகளுடன் கூடிய அலுவலங்களை வழங்குவதுடன் தில்லி மற்றும் பெங்களூரு வளாகங்களில் உள்ள சிடாட் மையத்தின் அதிநவீன ஆய்வக வசதிகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் நிதி மேலாண்மை, தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் விரிவான பயிற்சியும் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239370®=3&lang=1
***
AD/SV/KPG/RK
(रिलीज़ आईडी: 2239435)
आगंतुक पटल : 72