பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய மாணவர் படையின் கூடுதல் தலைமை இயக்குநர்கள் / துணை தலைமை இயக்குநர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு புது தில்லியில் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 1:01PM by PIB Chennai
தேசிய மாணவர் படையின் கூடுதல் தலைமை இயக்குநர்கள் / துணை தலைமை இயக்குநர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு மார்ச் 12, 2026 அன்று புது தில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
2047 - ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தேசிய மாணவர் படையை மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் நடத்தப்படும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு தேசிய மாணவர் படையினர் அளித்து வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
அனைத்து தேசிய மாணவர் படை இயக்குநரகங்களின் கூடுதல் தலைமை இயக்குநர்கள் / துணை தலைமை இயக்குநர்கள் உடனான தனது உரையாடலில், மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்புத் துறை செயலாளர் அழைப்பு விடுத்தார். இத்தகைய முயற்சிகள், தேசிய மாணவர் படையின் குறிக்கோள் மற்றும் நோக்கங்களை மிகவும் திறம்பட நிறைவேற்றுவதற்கு உதவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238793®=3&lang=1
(Release ID: 2238793)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239245)
வருகையாளர் எண்ணிக்கை : 16