மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தல், ஊக்கத்தொகை வழங்குதல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 11:34AM by PIB Chennai
கடந்த 5 ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) ஆந்திரப்பிரதேசத்தில் கடல்சார்ந்த மீன்பிடிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பு அளவு 2020-21-ல் 5.54 லட்சம் டன் என்பதிலிருந்து 2024-25-ல் 6.51 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
தனிச்சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகப்படுத்த ஆழ்கடல் மீன்பிடிப்பு உதவி, வழக்கமான படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகளாக மாற்றுதல் ஆகிய திட்டங்களை மத்திய மீன்வளத்துறை அறிமுகம் செய்துள்ளது. நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் இவை மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, ஆந்திரப்பிரதேசம் உட்பட கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஆந்திரப்பிரதேசத்தில் பாரம்பரிய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு உதவி திட்டத்தின் கீழ் 12 ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகளை வாங்க 9 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2 கோடியே 33 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ், 57 மீன்பிடி படகுகள் வாங்க 8 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டு மத்திய மீன்வளத்துறையால் 4 கோடியே 27 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான உதவி திட்டத்தின் கீழ், மத்திய அரசால் 15 கோடியே 26 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டு, ஆந்திரப்பிரதேசத்தின் பாரம்பரிய மீனவர்கள் 50 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு 6 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் மாநிங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238748®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239199)
வருகையாளர் எண்ணிக்கை : 22