அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சாலை அமைப்பில் இரும்புதாது கழிவுகளை பயன்படுத்துவது பசுமை சாலைகளுக்கு வழி வகுக்கும்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 12:02PM by PIB Chennai

சாலை அமைப்பில் இரும்புதாது கழிவுகளை பயன்படுத்த இந்தியாவின் சாலை ஆராய்ச்சி நிறுவனம், (சிஎஸ்ஐஆர் – சிஆர்ஆர்ஐ), எஃகு துறையில் முன்னணி நிறுவனமான ஆர்செலார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் தேசிய அறிவியல் தினத்தில் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித்துறை செயலாளருமான டாக்டர் என் கலைச்செல்வி, சுழற்சி பொருளாதாரம், கழிவு பொருளை செல்வமாக மாற்றுதல் என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சாலை அமைப்பில் இரும்புத் தாது, கழிவுப் பொருள்களை பயன்படுத்துவது பசுமைச் சாலைகளுக்கு  வழிவகுக்கும் என்றும் அவரி் கூறினார்.

ஒடிசா, சத்தீஸ்கர், கர்நாடகா மாநிலங்களில் பரவலாக உள்ள இரும்புத் தாதுக்களிலிருந்து கழிவுகளைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு சுமார் 18-20 மில்லியன் டன் இரும்புரத் தாது கழிவுப் பொருள்கள் உருவாகின்றன என்று கலைசெல்வி கூறினார். இவை ஏராளமாக இருப்பது சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்கும் சவாலாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தம், அதிகரித்து வரும் இரும்புத் தாது கழிவுப் பொருள் நிர்வாக சவாலுக்கும் தீர்வு காண்பதோடு சாலை அமைக்க இயற்கைப் பொருட்களின் தேவை கணிசமாக குறையும்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்செலார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி டாக்டர் அர்விந்த் போதாங்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238763&reg=3&lang=1

 

****

TV/SMB/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239184) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी