சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் இ–நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு 2025-26 நிதியாண்டில் 113 கோடி ஒதுக்கீடு- மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 12:53PM by PIB Chennai
இ-நீதிமன்றங்கள் எனும் மின்னணு முறையில் செயல்படும் நீதிமன்றங்கள் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகின்றன. 2011-2015 ஆண்டுகளில் முதல் கட்டமாக 14,249 நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டு 13,683 நீதிமன்றங்களில் உள்ளூர் பகுதி நெட்வொர்க் அமைக்கப்பட்டது.
2015-2023 ஆண்டுகளில் 2-ம் கட்டமாக நீதித்துறை பணிகள் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகளைப் பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் மூலம் தேசிய நீதித்துறை தரவுத் தொகுப்பு உருவாக்கப்பட்டது. தற்போது (2023-2027) 3-ம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 31.01.2026 நிலவரப்படி 660.36 கோடி நீதிமன்ற ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 30 மெய்நிகர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இவற்றின் மூலம் 10.13 கோடி செலான்கள் பெறப்பட்டு 9.05 கோடி செலான்கள் பைசல் செய்யப்பட்டன. அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களிலும் காணொலிக் காட்சிக்கான நிதிகள் அமல்படுத்தப்படுகின்றன. 3.17 கோடி விசாரணைகள் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் 277 நீதிமன்ற வளாகங்களில் 832 இ–நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போல் புதுச்சேரியின் 4 மாவட்டங்களில் உள்ள 4 நீதிமன்ற வளாகங்களில் 15 இ-நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்னணு முறையில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2015-16-ம் நிதியாண்டிலிருந்து 2021-22-ம் நிதியாண்டு வரை ரூ.70.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24-ல் ரூ.90.69 கோடியும், 2024-25-ல் ரூ.91.75 கோடியும் 2025-26-ல் ரூ.113.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238787®=3&lang=1
***
TV/SMB/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2238955)
வருகையாளர் எண்ணிக்கை : 13