நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மண்டல ஊரக வங்கிகளுக்கான அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 12:45PM by PIB Chennai

மண்டல கிராமப்புற வங்கிகளுக்கான ஒரு நாள் மாநாட்டை, இந்திய வங்கிகள் சங்கம் மார்ச் 11, 2026 அன்று புதுதில்லியில் நடத்தியது. இம்மாநாட்டில் மண்டல கிராமப்புற வங்கிகளுக்கான அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் - சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் விரிவான விவாதம் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, மண்டல ஊரக வங்கிகளுக்கான  வாய்ப்புகள், சவால்கள் மற்றும் அடுத்த தலைமுறை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த முயற்சி மண்டல அளவிலான கிராமப்புற வங்கிகளை வலுப்படுத்துவதையும், 2047 - ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைவதையும் நோக்கமாகக் கொண்ட விரிவான சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

மண்டல அளவிலான கிராமப்புற வங்கிகளின் தலைவர் மற்றும் நிதி சேவைகள் துறையின் இணைச் செயலாளர் திரு ஆஷிஷ் மதோராவ் மோர், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி திரு அதுல் குமார் கோயல் மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் திரு கோவர்தன் எஸ். ராவத் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளின் நிதி சேவைகள் மற்றும் இந்த மாநாடு நடத்துவதற்கு உதவியளித்த வங்கிகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

(i) வளர்ந்து வரும் இந்தியாவிற்கான வங்கி சேவைகள், (ii) வேளாண் நிதியுதவியில் புதுமை, (iii) டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மாற்றம், (iv) நிதி உள்ளடக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான எளிமைபடுத்தப்பட்ட நடைமுறைகள், (v) மண்டல கிராமப்புற வங்கிகளுக்கான மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு, மற்றும் (vi) கூட்டு அணுகுமுறை ஆகிய முக்கியதத்துவம் வாய்ந்த அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் உரையாற்றிய நிதி சேவைகள் துறையின் இணைச் செயலாளர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூட்டமைப்பு அடிப்படையிலான அணுகுமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மண்டல கிராமப்புற வங்கிகளின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238779&reg=3&lang=1

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2238941) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी