வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்க முன்முயற்சி பெண்கள் தலைமையிலான தூய்மைப்பணியை முன்னெடுத்தது

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 12:39PM by PIB Chennai

நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 கீழ் பெண்கள் தலைமையிலான தூய்மைப்பணியின் மூலம் நீடித்த தூய்மைக்கான முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தன்று பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் விழிப்புணர்வு இயக்கங்களுக்கும் தூய்மை செயல்பாடுகளுக்கும் சமூக ஈடுபாடுகளுக்கும் தலைமையேற்றனர். நீடித்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் எவ்வாறு முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டியது.

அகமதாபாதில் அந்த மாநகராட்சியைச் சேர்ந்த 100 பெண் தூய்மைப்பணியாளர்கள் டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் இவர்கள்  வெறும் பார்வையாளர்களாக மட்டுமில்லாமல், விளையாட்டுத் திடலை தூய்மையாக வைத்திருக்க விளையாட்டு ரசிகர்களுடன் நட்பு ரீதியாக உரையாடினர். குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்த ஊக்குவித்தனர். நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் பணியில்  ஈடுபட்ட அவர்கள் நகரமும் விளையாட்டரங்கமும் தூய்மையாக இருப்பது எவ்வளவு பெருமைக்குரியது என்பதை எடுத்துரைத்ததோடு நடத்தைப் பொறுப்பை உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.

வாரணாசி மாவட்ட சுகாதார துறையுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு குறிப்பாக பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம், அசாம் மாநிலம் போங்காய்கான், அரியானா மாநிலம் சூரஜ்குண்ட், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி உள்ளிட்ட  பகுதிகளிலும் பெண்கள் தலைமையிலான தூய்மை இந்தியா இயக்கப் பணிகள் நடைபெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238775&reg=3&lang=1   

***

TV/SMB/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2238844) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR