பாதுகாப்பு அமைச்சகம்
மொரீஷியஸ் துறைமுகத்திற்கு இந்தியக் கடற்படைக் கப்பல் 'திரிகண்ட்' வருகை
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2026 6:47PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் அதிநவீன மறைந்து தாக்கும் போர்க்கப்பலான 'திரிகண்ட்', தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனது கடல்சார் பாதுகாப்புப் பணியின் ஒரு பகுதியாக, மார்ச் 10 அன்று மொரிஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் துறைமுகத்திற்குச் சென்றடைந்தது.
இந்த வருகையின் போது,மார்ச் 12 அன்று நடைபெறவுள்ள மொரீஷியஸின் 58-வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் இக்கப்பல் பங்கேற்கிறது. போர்ட் லூயிஸில் உள்ள சாம்ப் டி மார்ஸ் மைதானத்தில் நடைபெறும் தேசிய தின அணிவகுப்பில், இந்தியக் கடற்படையின் அணிவகுப்பு குழு, கடற்படை இசைக்குழு மற்றும் கப்பலில் உள்ள ஹெலிகாப்டர் ஆகியவை பங்கேற்கின்றன.
கப்பலின் கமாண்டன்ட் அதிகாரி கேப்டன் சச்சின் குல்கர்னி, மொரிஷியஸ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு கடலோர காவல்படை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச உள்ளார். மேலும், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையிலான பயிற்சியைப் பகிர்ந்து கொள்ளுதல், கலாச்சாரப் பரிமாற்றங்கள், நட்புரீதியான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சமூக சேவை நடவடிக்கைகள் ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் மொரிஷியஸுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வருகை அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238452®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்:2238452
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2238623)
வருகையாளர் எண்ணிக்கை : 10