விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் – உணவு முறைகளில் மகளிர் குறித்த 3 நாள் உலக மாநாடு புதுதில்லியில் நடைபெறுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2026 4:59PM by PIB Chennai
வேளாண் – உணவு முறைகளில் மகளிர் குறித்த 3 நாள் உலக மாநாடு புதுதில்லியில் 2026 மார்ச் 12 முதல் 14 வரை நடைபெறவுள்ளது. இதை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளர் டாக்டர் எம் எல் ஜாட், இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளஹான் கௌரவ விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும், நிறைவு விழாவில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தலைமை விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.
வேளாண் அறிவியல் மேம்பாட்டிற்கான அறக்கட்டளை, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனை குழுமம், தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்துவதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238318®=3&lang=1
****
TV/IR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2238479)
வருகையாளர் எண்ணிக்கை : 17