நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தேசிய மின்னணு விதான் செயலியைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக 28 மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2026 2:05PM by PIB Chennai
தேசிய மின்னணு விதான் செயலியின் பயன்பாட்டை அந்தந்த சட்டப்பேரவைகளில் அமல்படுத்துவதற்காக மத்திய அரசு, 28 மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள், பஞ்சாப் உட்பட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. வர்த்தகப் பட்டியல், கேள்வி - பதில்கள், அறிவிப்புகள், மசோதாக்கள், விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும், அணுகுவதற்கும் ஒரு டிஜிட்டல் தளத்தை வழங்குவதன் மூலம், தேசிய மின்னணு விதான் செயலி காகிதப் பயன்பாடற்ற மற்றும் டிஜிட்டல் நடைமுறைகளை செயல்படுத்துகிறது.
பஞ்சாப் சட்டப்பேரவை ஏற்கனவே செப்டம்பர் 21, 2023 அன்று தேசிய மின்னணு விதான் செயலிக்கான தளத்தில் இணைந்ததன் மூலம் முழுமையாக டிஜிட்டல் பேரவையாக மாற்றியுள்ளது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு இன்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238093®=3&lang=1
***
(Release ID: 2238093)
TV/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2238211)
வருகையாளர் எண்ணிக்கை : 9