தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நாடு தழுவிய இருவாரகால 'சிறப்பு சேவைகள்' விழா

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 11:30AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் தலைமையகத்தில் மார்ச் 10 - ம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு சேவைகளுக்கான இருவார விழா நடைபெற்றது.

இந்த விழா, அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் மற்றும் பயனாளிகளின், அங்கீகாரம் மற்றும் நலனை மேம்படுத்துவதில் இந்த கழகத்தின் அர்ப்பணிப்புணர்வை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அதன் தலைமை இயக்குநர் திரு அசோக் குமார் சிங் கலந்து கொண்டார். அந்நிறுவனத்தின் நிதி ஆணையர் திருமதி டி.எல். யாதன், தலைமை கண்காணிப்பு அதிகாரி திரு மணீஷ் குமார் அகர்வால் மற்றும் மருத்துவ ஆணையர் டாக்டர் சப்னா மிட்டல் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆதாயம் பெற பங்களிப்போம் என்று கருப்பொருளில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் சார்பில் தன்னலமற்ற சேவை என்ற இருவாரகால விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதன் தலைமை இயக்குநர் திரு அசோக் குமார் சிங், இந்த கருப்பொருள் சமூகப் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டார். அதன் விரிவான சுகாதார முயற்சிகள் மூலம், தரமான மருத்துவ பராமரிப்பு மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்பிற்கான நிலையான நடவடிக்கைகளை உறுதி செய்வதன் மூலம், நாடு முழுவதும் உள்ள பெண் பயனாளிகளுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம்  தொடர்ந்து அதிகாரம் அளித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போது, இந்த நிறுவனத்தின் சேவைகளில் 3.84 கோடிக்கும் அதிகமான நபர்கள் சந்தாதாரகளாக உள்ளனர் என்றும், இதன் வாயிலாக அவர்களது குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது என்றும் கூறினார். பெண்களின் சுகாதாரம், மகப்பேறு சலுகைகள் மற்றும் ஒட்டுமொத்த நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அதன் நிதி ஆணையர் திருமதி டி.எல். யாதன், நாடு முழுவதும் உள்ள பெண் பயனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களின் உடல்நலம், பாதுகாப்பு, நலவாழ்வைத் தொடர்ந்து ஆதரிப்பதற்கும் இந்த நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாக  தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238000&reg=3&lang=1

 

***

(Release ID: 2238000)

TV/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2238139) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Telugu