கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2026 4:16PM by PIB Chennai
2019-20-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் வரையிலான கால கட்டத்தில் வாகனங்களின் பயன்பாடு கீழே அதிகரித்துள்ளது:
2019-20-ம் நிதி ஆண்டில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 1.74 லட்சமாக இருந்தது.
2024-25-ம் நிதி ஆண்டில் அது 19.68 லட்சமாக அதிகரித்தது. மின்சார வாகன உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த கனரக தொழில்துறை அமைச்சகம் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. 15.09.2021 அன்று, ₹25,938 கோடி செலவில் மேம்பட்ட வாகனத் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது.
தேசிய மேம்பட்ட வேதியியல் பேட்டரி செல் தயாரிப்பும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் இணைக்கப்பட்டது.
பிரதமரின் மின்சார வாகனத் திட்டம் 29.09.2024 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 01.04.2024 முதல் 31.03.2028 வரையிலான நான்கு ஆண்டுகளில் ₹10,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் மின்சாரப் பேருந்து சேவைத் திட்டம், ₹3,435.33 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மின்சார பயணிகள் கார்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம் 15.03.2024 அன்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலை கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237556®=3&lang=1
(Release ID : 2237556)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237864)
வருகையாளர் எண்ணிக்கை : 16