நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுத்துறை வங்கிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இஏஎஸ்இ 8.0 சீர்திருத்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர் புகார் தீர்வு, வங்கிகளின் சொத்து தரம் மற்றும் செயல்திறன் போன்ற பல அம்சங்களில் பொதுத்துறை வங்கிகள் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன

प्रविष्टि तिथि: 10 MAR 2026 3:30PM by PIB Chennai

2025–26 நிதியாண்டில் EASERise என்ற பெயரில் இந்தப் புதிய கட்ட சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அபாய மேலாண்மை, புதுமை, சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறப்பான சேவை போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு, உள்ளடக்கிய வங்கி சேவைகள், நிலைத்த வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த சீர்திருத்தத் திட்டம் இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் செயல்படும் EASE வழிகாட்டும் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படுகிறது. அதன் செயல்பாடுகள் காலாண்டு தோறும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பொதுத்துறை வங்கிகளின் முன்னேற்றம் தரவு மற்றும் செயல்திறன் அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது.

இந்த தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. பங்கஜ் சௌதரி இன்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237483&reg=3&lang=1

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2237859) आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी