வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவை உலகின் மிகப்பெரிய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி நாடாக மாற்ற வலுவான ஒத்துழைப்பு தேவை: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2026 1:05PM by PIB Chennai
இந்தியாவை உலகின் மிகப்பெரிய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி நாடாக உருவாக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். தில்லியில் நடைபெற்ற ஆஹார் – சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியின் 40-வது பதிப்பைத் தொடங்கி வைத்து அவர் பேசினார். இந்தியாவின் உணவு மற்றும் வேளாண் பொருட்களின் ஆண்டு ஏற்றுமதி தற்போது சுமார் ரூ 5 லட்சம் கோடி (55 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும், இதனால் உலகில் ஏழாவது பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார்.
2014 முதல் 2025 வரை கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண் மற்றும் உணவு ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், கோகோ போன்றவற்றின் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். இந்த முன்னேற்றம் இந்தியா உலகின் “உணவுக் களஞ்சியம்” ஆக மாற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் 38 முன்னேற்றமான நாடுகளின் சந்தைகளில் இந்தியப் பொருட்களுக்கு பெரிய வாய்ப்புகள் திறந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு-நடுத்தர தொழில்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும், பால் போன்ற உணர்வுப்பூர்வமான துறைகளில் வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் ரூ 1 லட்சம் கோடி மதிப்புள்ள வேளாண் கட்டமைப்பு நிதியை பயன்படுத்தி உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் உலகச் சந்தைகளில் அதிக மதிப்புள்ள வாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் ஆஹார் கண்காட்சியில் இத்தாலி கூட்டாளர் நாடாக இருப்பதை அவர் வரவேற்று, உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் இத்தாலியின் சிறந்த நடைமுறைகளிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ளலாம் என்றும், இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புகள் வளரலாம் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய உணவுப் பொருட்களின் உலகளாவிய வர்த்தகம் மேலும் விரிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237397®=3&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237830)
வருகையாளர் எண்ணிக்கை : 14