குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் விஸ்வகர்மா, எம்எஸ்எம்இ திட்டங்கள் மகளிர் கைவினைஞர்கள், தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2026 1:06PM by PIB Chennai
உதயம் பதிவு தளம், உதயம் உதவித் தளம் ஆகியவற்றில் கிடைத்த தரவின்படி, 2026 பிப்ரவரி 28 வரை மகளிர் தலைமையிலான பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 3,07,42,621 ஆகும்.
எந்தவொரு இணைப் பாதுகாப்பு அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இன்றி, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்காக உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களுக்கு கடன் உத்தரவாதங்களை வழங்குவதற்காக, குறு, சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் மூலம் 90 சதவீத கடன் உத்தரவாதம் மகளிர் தலைமையிலான குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. உத்தரவாதக் கட்டணத்தில் 10 சதவீத தளர்வும் அளிக்கப்படுகிறது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயிற்சி நிதியுதவியுடன் அடிப்படை திறன் பயிற்சி (5 – 7 நாட்கள்), மேம்பட்ட பயிற்சி (15 நாட்கள் அல்லது அதற்கும் மேல்) மூலம் கைவினைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மின்னணு வர்த்தக சந்தைகளை அணுகுதல், தயாரிப்புகளை விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட சந்தை ஆதரவும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், பயனாளிகளின் திறன்கள் வலிமையடைய உதவுவதுடன் குறு தொழில் நிறுவன நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பும் அதிகரிக்கிறது.
இத்தகவலை மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236871®=3&lang=1
***
AD/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2236949)
வருகையாளர் எண்ணிக்கை : 13