இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சி அடைந்த பாரத இளைஞர் இணைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை தில்லியில் தொடங்குகிறது

தேசிய தலைநகரில் உள்ள 35-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAR 2026 3:33PM by PIB Chennai

மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம், மேரா யுவ பாரத் எனப்படும் மை பாரத் மூலம், வளர்ச்சி அடைந்த பாரத இளைஞர் இணைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை (மார்ச் 9, 2026) தில்லியில் தொடங்குகிறது. 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இளைஞர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

2025-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் கட்டத்தின் போது பெறப்பட்ட அமோக வரவேற்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது கட்டம் நடத்தப்படுகிறது. இதில் தில்லி முழுவதும் 35-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துரையாடல் அமர்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள். இது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துடன் இளைஞர்களை இணைக்கவும் பொறுப்பான தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாக அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி தில்லி முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவுகளும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மை பாரத் தளமான https://mybharat.gov.in/ என்ற தளத்தின் மூலம் நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236575&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2236681) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी