அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தலைமைத்துவம், புதுமை மற்றும் நல்வாழ்வில் பெண்களின் பங்கு குறித்த ஊக்கமளிக்கும் உரைகளுடன் சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர், 2026 சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 5:06PM by PIB Chennai

சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், புது தில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்–தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NIScPR) அறிவியலில் பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அறிவியல் முன்னேற்றம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்க விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு மார்ச் 6, 2026 அன்று நடைபெற்றது.

வரவேற்பு உரையில், சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இயக்குனர் டாக்டர் கீதா வாணி ராயசம், சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், மேலும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்து அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பல்வேறு அறிவியல் துறைகளில் பெண் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து வருவதாகவும், அறிவியலில் பெண்களுக்கு உள்ளடக்கிய மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவதாகவும் அவர் கூறினார்.

தலைமை விருந்தினராக கலந்து கொண்ட விஞ்ஞானி டாக்டர் விபா மல்ஹோத்ரா சஹ்வ்னி, இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை முன்னேற்றுவதில் சிஎஸ்ஐஆர்-ன் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார், மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், "விக்யான் பிரகதி" என்ற  சிறப்பு இதழும் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு இதழில் பிரபல விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இந்தியாவின் ஏவுகணை பெண்மணி - டெஸ்ஸி தாமஸ், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் என். கலைசெல்வி ஆகியோரின் நேர்காணல் மற்றும் ரோகிணி காட்போல், கௌரா தேவி மற்றும் பெண் அறிவியல் தொடர்பாளர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236385&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236438) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी