PIB Headquarters
azadi ka amrit mahotsav

குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 1:49PM by PIB Chennai

முக்கிய அம்சங்கள்:

* நாடு முழுவதும்18,000- க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த மையங்கள் 50% முதல் 80% வரை குறைந்த விலையில் தரமான பொது (ஜெனரிக்) மருந்துகளை விற்பனை செய்கின்றன

* மார்ச் 2027-க்குள் 25,000 பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களைத் திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

* பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் போன்றோர் இந்த மையங்களை நிறுவ2 லட்சம் வரை சிறப்பு ஊக்கத்தொகையைப் பெறுகிறார்கள்.

* 1 க்கு மக்கள் மருந்தக சுவிதா சானிட்டரி நாப்கின்கள், சுகம் மொபைல் செயலி போன்ற முயற்சிகள் மாதவிடாய் ஆரோக்கியத்தையும் மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்புக்கான டிஜிட்டல் அணுகலையும் மேம்படுத்துகின்றன .

அறிமுகம்:

கடந்த சில ஆண்டுகளில், சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்த இந்தியா நிலையான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வீட்டுச் செலவுகளில் மருந்துகள் கணிசமான பங்கைக் கொண்டிருப்பதால், நியாயமான விலையில் அவை கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது. பிராண்டட் மருந்துகள் பெரும்பாலும் அதிக விலையில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை ஒரே சிகிச்சை மதிப்பைக் கொண்டுள்ளன. இந்த வேறுபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், சிகிச்சை செலவுகளைக் குறைப்பதற்கும், அத்தியாவசிய மருந்துகளுக்கான அணுகலைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிலையான கொள்கை தலையீடு தேவைப்படுகிறது.

இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கட்டமைப்பு மூலம் தர உறுதி செய்யப்பட்ட பொது (ஜெனரிக்) மருந்துகளை மிகக் குறைந்த விலையில் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மலிவு விலையில், தரமான ஜெனரிக் மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக நாடு தழுவிய அளவில் மக்கள் தொடர்பு முயற்சியாக மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. இன்று (மார்ச் 7) மக்கள் மருந்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஒரு வார காலத்தில், ரசாயனம் - உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறை, நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்தது

மக்கள் மருந்தகங்களில் மருந்துகளின் தர உறுதி:

மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகள், உலக சுகாதார அமைப்பின் சிறந்த உற்பத்தி நடைமுறைகளுக்கு ஏற்ப உற்பத்தியைப் பின்பற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து பிரத்தியேகமாக வாங்கப்படுகின்றன. இதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரம் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மருந்து தொகுப்பும் தேசிய சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வக அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட தர அளவுருக்களுக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் விரிவுபடுத்துதல்:

இந்தத் திட்டத்தின் கீழ், 18000க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் (JAK) செயல்பாட்டில் உள்ளன. இந்தத் திட்டத்தின் தயாரிப்புப் பிரிவில் 2,110 மருந்துகளும், 315 அறுவை சிகிச்சைப் பொருட்களும் உள்ளன. சராசரியாக, தினமும் சுமார் 10 முதல் 12 லட்சம் பேர் இந்த மையங்களுக்கு வருகை தந்து மலிவு விலையில் தரமான மருந்துகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக, மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகள், பிராண்டட் மருந்துகளை விட 50% முதல் 80% வரை குறைவாக இருக்கும். இது ஏழைகளின் சுகாதார செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கிறது. மார்ச் 2027-க்குள் இந்தத் திட்டத்தின் கீழ் 25,000 மருந்து விற்பனை கூடங்களை திறக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

முடிவுரை:

இந்தியாவில் மலிவு விலையில் தரமான சுகாதார சேவையை மேம்படுத்துவதில் பிரதமரின் மருந்தகத் திட்டம் ஒரு முக்கிய தூணாக மாறியுள்ளது. தரமான பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகள் கணிசமாக குறைந்த விலையில் பரவலாகக் கிடைப்பதை இது உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள ஏராளமான குடும்பங்களின் மருத்துவச் செலவுகளின் சுமையைக் குறைக்க உதவியுள்ளது. செலவுக் குறைப்புக்கு அப்பால் அணுகல், நம்பிக்கை, அதிகாரமளித்தலை இது வளர்க்கிறது. இந்தத் திட்டம் அதன் வரம்பை தொடர்ந்து விரிவுபடுத்தப்படுகிறது. அனைவருக்கும் நம்பகமான முறையில், மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236292&reg=3&lang=1   

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236360) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Bengali , Gujarati , Malayalam