தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் தொலைத்தொடர்பு உரிமம் பெற்ற பகுதிகளில் சேவைகளின் தரத்தை ட்ராய் மதிப்பீடு செய்தது

प्रविष्टि तिथि: 06 MAR 2026 4:58PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான உரிமம் பெற்ற பகுதிகளில் சேவைகளின் தரம் குறித்து மதிப்பீடு செய்தது.

கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரயில்வே, கடலோரப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில் குரல் மற்றும் தரவு சார்ந்த சேவைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூருவில் உள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மண்டல அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மும்பை நகர்ப்புறப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து மையங்கள், முக்கிய இடங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் மொபைல் சேவையின் செயல்திறன் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனைகளின் முடிவுகள் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235977&reg=3&lang=1

***

TV/SV/RJ/SH


(रिलीज़ आईडी: 2236059) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi