குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 மார்ச் 6–8 வரை நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுராவுக்கு பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 7:01PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 மார்ச் 6–8 வரை நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். குடியரசு துணைத்தலைவராகப் பதவியேற்றதிலிருந்து இந்த மாநிலங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்வது, இதுவே முதல்முறையாகும்.
மார்ச் 6 அன்று நாகாலாந்தின் லுமாமியில் நடைபெறும் நாகாலாந்து பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் கலந்துகொள்வார்.
மார்ச் 7 அன்று, மிசோரமின் ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவிலும் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.
மார்ச் 8, 2026 அன்று அகர்தலாவில் உள்ள திரிபுரா பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவிலும் திரு ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார். அன்றைய தினம், ஹபானியாவில் நடைபெறும் சர்வதேச வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையத்தில் உள்ள சுய உதவிக்குழு அரங்குகளைப் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகளுடன் குடியரசு துணைத்தலைவர் கலந்துரையாடுவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235685®=3&lang=1
***
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235839)
வருகையாளர் எண்ணிக்கை : 51