PIB Headquarters
வர்த்தகச் சூழலை மாற்றியமைக்கும் கொள்கை சீர்திருத்தங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 11:50AM by PIB Chennai
கடந்த சில ஆண்டுகளில், முதலீடுகளுக்கு மட்டுமின்றி, வர்த்தகம் செய்வதற்கும் மிகவும் உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில் ஒரு ஒழுங்குமுறை சீர்திருத்தத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
வர்த்தகம் செய்வதற்கான எளிமையான நடைமுறைகள், அவை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளுடன், இந்தியா தற்போது செயல்திறன் கொண்ட வாய்ப்பின் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள இளம் தொழில்முனைவோரின் ஆற்றல் மிகுந்த சமூகமும் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளில், முன்னேற்றம் சார்ந்த சூழல் அமைப்பின் பயன்களைப் பெற அதிகாரம் அளிப்பதற்குத் தயாராக உள்ளன. இந்திய வர்த்தகச் சூழல் அமைப்பு வலுப்பெற்றுள்ளதுடன், மேலும் ஐந்து ஆண்டுகளில், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் 27% அதிகரித்துள்ளது. இது கடந்த 2020–21 - ம் ஆண்டில் 1.55 லட்சத்திலிருந்து 2025–26 - ம் ஆண்டில் 1.98 லட்சமாக (பிப்ரவரி 3, 2026 நிலவரப்படி) உயர்ந்துள்ளது.
2024-25 நிதியாண்டு வரை மற்றும் 2025-26 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டிலும், ரிசர்வ் வங்கியின் வர்த்தக எதிர்பார்ப்புக் குறியீடு 100 என்ற நிலையில் தொடர்ந்து இருப்பது, எதிர்கால உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு குறித்த நேர்மறையான தாக்கத்தைக் குறிப்பதாக உள்ளது. இந்த குறிகாட்டிகள் அனைத்தும் சேர்ந்து, தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளில் தொடர்ச்சியான மீள்தன்மையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மேலும் தேவை மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வர்த்தகச் சூழலைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
டிஜிட்டல் அடிப்படையிலான வர்த்தக வசதிகள், நிலையான வரி விதிப்புக் கொள்கை, குறைக்கப்பட்ட இணக்க நடைமுறைகள், வழக்கு, நம்பிக்கை அடிப்படையிலான சுங்க அமைப்புகள் மற்றும் முதலீட்டுக்கு உகந்த வரி நிர்வாக நடைமுறைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான எளிதான சூழலை 2026–27 - ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் உறுதி செய்கிறது.
புத்தொழில் நிறுவனங்கள், கடன் உத்தரவாதத் திட்டம், டிஜிட்டல் கடன் மதிப்பீட்டு மாதிரிகள் போன்ற நிறுவன அளவிலான சீர்திருத்தங்கள் வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த, முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் அமைப்பை உருவாக்குகின்றன.
ஜன் விஸ்வாஸ் சட்டம், ஐபிசி, எம்ஏடி போன்ற ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் திறன் மேம்பாடு, ஒழுங்குமுறை சார்ந்த கட்டுப்பாடுகள், நம்பிக்கை, பொறுப்புணர்வு போன்ற பல்வேறு அம்சங்களுடன் சிறந்த நிர்வாக நடைமுறைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235433®=3&lang=1
***
TV/SV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235528)
வருகையாளர் எண்ணிக்கை : 61