இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனத்தின் சில பங்குகளை ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் பிடபிள்யூபி நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 10:46AM by PIB Chennai

பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சில பங்குகளை ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் பிடபிள்யூபி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் பிடபிள்யூபி பிரைவேட் லிமிடெட் (GASBWP) நிறுவனம், பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் (பாலாஜி வேஃபர்ஸ்) நிறுவனத்தின் சில பங்குகளை முழுமையாக தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து வாங்குகிறது.

ஜெனரல் அட்லாண்டிக் சிங்கப்பூர் பிடபிள்யூபி என்பது சிங்கப்பூர் சட்டங்களின் கீழ் செயல்படும் ஒரு முதலீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொழில்நுட்பம், சுகாதாரம் நிதி சேவைகள், உள்கட்டமைப்பு, உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் போன்ற உலகளாவிய துறைகளில் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதரவை வழங்கும் நிறுவனமாகும். நீண்டகால முதலீடுகளை வைத்திருப்பதே இதன் நோக்கமாகும்.

பாலாஜி வேஃபர்ஸ் என்பது உப்பு சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகள், உப்பு சேர்க்காத சிற்றுண்டிகள், பிஸ்கட்கள், சாப்பிடத் தயாராக உள்ள உணவுகள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட பேக் செய்யப்பட்ட உணவுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய சிற்றுண்டி உணவு உற்பத்தி நிறுவனமாகும். இது மேற்கு, மத்திய இந்தியாவில் குறிப்பாக வலுவான இருப்பைக் கொண்டு, இந்தியா முழுவதும் விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்களின் பரந்த கட்டமைப்பு மூலம் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

பங்கு மாற்றம் தொடர்பான ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235406&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235501) வருகையாளர் எண்ணிக்கை : 57
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी