இந்திய போட்டிகள் ஆணையம்
மத்திய பொது மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில், ரிசர்வ் வங்கி, கூடுதல் பங்குகளில் முதலீடு செய்வதற்கு, இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
05 MAR 2026 10:47AM by PIB Chennai
இந்திய போட்டி ஆணையம், மத்திய பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மத்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றில் கூடுதல் பங்குகளை ரிசர்வ் வங்கி முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மத்திய பொதுக் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து 1.09% கூடுதல் பங்குகளையும், மத்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து 0.82% கூடுதல் பங்குகளையும் வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில், வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்வது, கடன் வழங்குதல் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட வங்கி சேவைகளை வழங்குவதில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில், காப்பீட்டு சார்ந்த பல்வேறுத் திட்டங்களை வழங்குவதில் மத்திய பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மத்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இவை பொதுக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டு சேவைகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235410®=3&lang=1
***
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2235473)
आगंतुक पटल : 58