மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தக வாரம் 2026: 3-ம் நாளில் மருத்துவ முகாம்களில் மக்கள் பங்கேற்பு அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2026 5:41PM by PIB Chennai

மலிவான மற்றும் தரமான மருந்துகளை ஊக்குவிக்கும் 'மக்கள் மருந்தக வாரம் 2026' , அதன் மூன்றாவது நாளை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது. மார்ச் 7 அன்று நடைபெறவுள்ள 8-வது மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிஎம்பிஐ அமைப்பு நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 1 முதல் 5 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது.

 

"மக்கள் மருந்து மலிவானது மற்றும் நம்பகமானது" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இன்றைய முகாம்களில், இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் வழங்கப்பட்டன. திட்டமிடப்பட்ட 44 முகாம்களையும் தாண்டி, இன்று 47 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டின் திருவள்ளூர் உட்பட ஹூப்ளி, மலப்புரம், ராய்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.

 

இவற்றில் ரத்த அழுத்தம், தைராய்டு சோதனைகள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், பெண்களுக்கு 'சுவிதா' சானிடரி பேட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில், 2027 மார்ச் மாதத்திற்குள் அவற்றை 25 ஆயிரமாக  உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235074&reg=3&lang=1

 

 செய்தி வெளியீட்டு எண்:2235074

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235191) வருகையாளர் எண்ணிக்கை : 113
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada