குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஹோலிப் பண்டிகையையொட்டி மக்களவைத் தலைவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 MAR 2026 4:44PM by PIB Chennai

ஹோலிப் பண்டிகையையொட்டி மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:

“வண்ணங்கள், உற்சாகம் மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தை கொண்டாடும் மகிழ்ச்சிகரமான ஹோலிப் பண்டிகையையொட்டி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த வண்ணத் திருவிழா நமது வளமான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் சகோதரத்துவத்தின் பெரும் வெளிப்பாடாகும். வாழ்க்கையில் எவ்வளவு சவால்கள் இருந்தபோதிலும், அன்பு, உண்மை, நேர்மை ஆகிய வண்ணங்கள் அனைத்து இருளையும் அகற்றிவிடும் என்பதை ஹோலி நமக்கு நினைவூட்டுகிறது. நாம் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைத் தூவும் போது, நாம் பாகுபாட்டை களைந்து சமத்துவம் மற்றும் ஒற்றுமை செய்தியை தெரிவிக்கிறோம். இது நமது நாட்டின் சிறந்த வலிமையாகும்.

நமது நாடு முழு பன்முகத்தன்மை உடையது. ஹோலிக் கொண்டாட்டங்கள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தால் நம்மை பிணைக்கிறது.

இந்த ஹோலியில் அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் நமது சமூகத்தை நிரப்ப நாம் உறுதியேற்போம். தனித்திருப்போர் அல்லது தேவையுடையவர்களுடன் இந்த விழாவின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வோம்.

மீண்டும் ஒருமுறை, அனைவருக்கும் ஹோலிப் பண்டிகை நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியின் துடிப்பான வண்ணங்களால் நிறம்பட்டும். மேலும் நமது நாடு அன்பு, வளர்ச்சி மற்றும் ஒற்றுமை வண்ணங்களால் தொடர்ந்து பிரகாசிக்கட்டும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235027&reg=3&lang=1

***

(Release ID: 2235027)

TV/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235098) வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Kannada