PIB Headquarters
உலக வன உயிரின தினம் 2026 மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள்: சுகாதாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAR 2026 2:06PM by PIB Chennai
மக்களிடம் வன தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதற்கு ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட உலக வன உயிரின தினம் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. வன உயிரினங்கள் வெறுமனே இயற்கையின் அழகு மட்டுமல்ல. உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், பருவநிலை உறுதித் தன்மை, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியமான தூண்களாகும். பல்லுயிர் பெருக்கம் என்பது எதிர்கொண்ட அச்சுறுத்தல் காரணமாக உலக உயிரின தினம் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக அளவில் கோரிக்கை எழுந்தது.
“மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் சுகாதாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்றன” என்பது உலக உயிரின தினம் 2026-ன் மையப்பொருளாகும். உலகில் வளரும் நாடுகளில் உள்ள 70 முதல் 95 சதவீதம் வரையிலான மக்கள் பாரம்பரிய மருத்துவத்தை சார்ந்துள்ளனர். அவர்களின் சுகாதாரப் பயன்பாட்டுக்கு அப்பால், இந்த தாவரங்கள், மகரந்த சேர்க்கைக்கு உதவுவதோடு மண்வளத்தைப் பாதுகாக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தை விரிவாக்குகின்றன. எனவே, இவற்றின் பாதுகாப்பு உலகின் குறிப்பாக வளமான பல்லுயிர் பெருக்கம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் முன்னுரிமையாக உள்ளது.
இந்தியா 15 வேளாண் பருவ பிராந்தியங்களைக் கொண்டுள்ளது. இங்கு 45,000 தாவர இனங்கள் உள்ளன. இவற்றில் 15,000 மருத்துவத் தாவரங்களாகும். இவற்றிலும் சுமார் 8,000 தாவரங்கள் இந்திய மருத்துவ முறைகளிலும், நாட்டு மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களில் 70 சதவீதம் மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்கள் இமயமலை மற்றும் ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் உள்ள வனங்களில் காணப்படும்.
நாடு முழுவதும் மருத்துவ தாவரங்களின் பாதுகாப்பு, சாகுபடி, நீடித்தத் தன்மை ஆகியவற்றை மேம்படுத்த மத்திய அரசு பல முக்கியத் திட்டங்களை தொடங்கியுள்ளன. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் முக்கிய திட்டமான தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ், மருத்துவ தாவரத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதே போல், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், மருத்துவத் தாவரங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதனை செயல்படுத்துகின்றன.
பிரத்யேக நிறுவனங்கள், அதிகாரம் அளிக்கப்பட்ட சமூகங்கள், அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கைகள் ஆகியவற்றின் மூலம் இந்தியா தனது பசுமை சொத்தினை பாதுகாப்பது மட்டுமின்றி அதனை சுகாதாரம், பெருமிதம், வரும் தலைமுறைகளுக்கான வள ஆதாரமாக மாற்றிவருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234951®=3&lang=1
---
TV/SMB/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235095)
வருகையாளர் எண்ணிக்கை : 82