கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தோ-ரஷ்ய கலாச்சார நட்புறவின் ஒரு அங்கமாக உலக அளவிலான நடன நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 03 MAR 2026 10:33AM by PIB Chennai

இந்தியா - ரஷ்யா இடையே நீடித்த சிறப்பு வாய்ந்த உத்திசார் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற  கோஸ்ட்ரோமா ரஷ்ய தேசிய பாலே நடனம் இன்று நடைபெறவுள்ளது. புது தில்லியன் கமானி அரங்கில் நடைபெறவுள்ள இந்த நடன நிகழ்ச்சி, ரஷ்யாவின் கலாச்சார மற்றும் கல்வித் திட்டமான குளோபல் நடன முயற்சிகளின் ஒரு தொடக்கமாக அமையும்.

இந்த நிகழ்ச்சியை மத்திய கலாச்சார அமைச்சகச் செயலாளர் திரு விவேக் அகர்வால் தொடங்கி வைக்கிறார். இந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் திரு டெனிஸ் எவ்ஜெனீவிச் அலிபோவ், சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரெச்சா, ரஷ்ய தேசிய பாலே "கோஸ்ட்ரோமா" நடன இயக்குனர் திருமதி எலினா சரென்கோ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

கலாச்சார முயற்சிகளுக்கான முதன்மை அறக்கட்டளை, வெளியுறவு அமைச்சகம், ரஷ்ய கூட்டமைப்பின் கலாச்சார அமைச்சகம், ரஷ்ய  தூதரகம் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

கலாச்சார அம்சங்களின் ஒரு பகுதியாக, கோஸ்ட்ரோமா ரஷ்ய தேசிய பாலே ரஷ்ய நடன அமைப்பு இதனை தேசிய நடன நிகழ்ச்சியாக வழங்கும். இது ஐந்து கண்டங்களில் உள்ள 50 நாடுகளைச் சேர்ந்த ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் ரஷ்யாவின் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நடன நிகழ்ச்சியாகும். இந்த நடனத்தை, ரஷ்ய கூட்டமைப்பின் தலைமை நடன இயக்குநரும், கௌரவ கலைஞருமான யூரி சரென்கோ வடிவமைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட மக்களுக்கு பன்னாட்டு கலாச்சாரத்தின் வலுவான பிணைப்பு மற்றும் நாட்டுப்புற மரபுகளை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வண்ணங்கள், உடைகள் மற்றும் உண்மையான நடனக் கலைகளின் செயல்திறன் மூலம், இந்த நிகழ்ச்சி ரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மற்றும் தேசிய பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த நடனம் சன்னி காகசஸ், புரியாஷியா, சைபீரியா, தொலைத்தூர வட பகுதிகள் மற்றும் மத்திய ரஷ்யாவில் வசிக்கும் மக்களின் நடன கலாச்சாரங்களை எடுத்துக் காட்டுகிறது.

சிறப்பு நிகழ்ச்சியாக, இந்திய நடனக் கலைஞர்கள் "ஜெயதி ஜெய மாமா பாரதம்" என்ற இசையமைப்பை வழங்குவார்கள். இது இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை எடுத்துரைக்கும் ஒரு நடனக் காட்சியாகும். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுப்புற மரபுகளை, ஒருங்கிணைந்த கலையம்சமாக காட்சிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234841&reg=3&lang=1

***

AD/SV/KR


(रिलीज़ आईडी: 2234904) आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi